News

தன்னை பற்றி அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீது மான நஷ்டவழக்கு போட்ட சமந்தா !

Published

on

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் நாகசைதன்யாவை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்தார் நடிகை சமந்தா. இந்த பிரிவுக்கு பல தரப்பிலிருந்து பல கருத்துகள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக அப்பட்டமான பொய்யாக பேசப்பட்ட ஒன்று சமந்தாவிற்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்றும் சமந்தாவின் காஸ்ட்யூம் டிசைனருக்கும் இருக்க கள்ளத்தொடர்புதான் காரணம் என்று பேசி வந்தனர்.

இதனை முற்றிலுமாக மறுத்த நடிகை சமந்தா என் தனிப்பட்ட விவகாரங்களில் யாருமே தலையிட கூடாது என்று இவரின் சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அதையும் மீறி பல தெலுங்கு யுடியூப் சேனல்களில் சமந்தாவின் பிரிவு குறித்த விவாதங்கள் நடத்தி வீடியோ வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில் கோபம் கொண்ட சமந்தா தன்னைப்பற்றி அவதூறு பரப்பும் சில யூடியூப் சேனல்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்ற வழக்கறிஞர் சமந்தாவின் திருமண வாழ்க்கை குறித்தும் அவருக்கும் பல ஆண்களுடன் தொடர்ப்பு இருந்ததாகவும் பேசியிருந்தார் அவர் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகை சமந்தா.

Trending

Exit mobile version