Connect with us
 

News

நடிகையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய சமந்தா !

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பலருக்கு உதவி செய்தும் வருகிறார். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் நாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வரும் தேஜஸ்தி மடிவாடா என்ற நடிகைக்கு உதவியுள்ளார் சமந்தா.

தேஜஸ்வி மடிவாடா தமிழில் வெளியான நட்பதிகாரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இவருக்குத்தான் நடிகை சமந்தா உதவியுள்ளார்.

தேஜஸ்தி மடிவாடா இது பற்றி கூறியதாவது:- சிறுவயதிலிருந்தே என் தாய் இறந்து விட்டார் என் தந்தை குடிபோதைக்கு அடிமையாகிவிட்டார் இதன் காரணமாக நான் ஒரு அனாதையாக வளர்ந்தேன்.

சினிமாவுக்கு நடிக்க வந்த பின்னரும் நான் பல கஷ்டங்கள் அனுபவித்தேன். இந்த நிலையில்தான் எனக்கு டிபி நோய் தாக்கியது. அப்போது ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள் என்னிடம் அப்போது பணம் இல்லை மிகவும் கஷ்டப்பட்டேன்.

அந்த சமயத்தில் நடிகை சமந்தா பெரிய மனதுடன் முன்வந்து அவரது சொந்த செலவில் எனக்கு அறுவை சிகிச்சை செய்து என்னை காப்பாற்றினார் என்று கூறினார் நடிகை தேஜஸ்தி மடிவாடா.