News
மீண்டும் இணைந்து நடிக்கும் சமந்தா – நாகசைதன்யா !

காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்து செய்து கொண்ட ஜோடி சமந்தா மற்றும் நாக சைதன்யா.
கடந்த 2019-ம் ஆண்டு நந்தினி ரெட்டி என்ற தெலுங்கு பெண் இயக்குநர் சமந்தா மற்றும் நாக சைதன்யாவுடன் ஒரு கதை கூறியுள்ளார். அப்போது இருவரும் அப்படத்தில் இணைந்து நடிக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளனர்.
தற்போது அப்படத்திற்கான பணிகள் ஆரம்பித்துள்ளதாகவும் மிக விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விவாகரத்திற்கு பின்னர் சமந்தா – நாகசைதன்யாவும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.