News
தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த சமந்தா !

சமந்தா மயோசி டிஸ் என்ற நோயால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருக்கிறார். சிகிச்சை பெற்றாலும் அவ்வப்போது இந்தியா வந்து சில நிகழ்சிகளில் கலந்து கொள்கிறார். தற்போது புதிய படங்களில் நடிக்க கதையும் கேட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமந்தா டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளார். ஜதராபாத்தை சேர்ந்த மாண்டோவா மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து புதிய படங்களை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில் ‘ டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நோக்கம் புதிய சிந்தனையும் இக்கால வயதினரின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவதுமே ஆகும். நமது சமூக கட்டமைப்பின் வலிமையை பறைசாற்றும் கதைகளை ஊக்குவிக்கும் தளமாக இருக்கும். அர்த்துமுள்ள உண்மையான, உலகளாவிய படைப்புகளையும் சொல்லும் ஒரு மேடையாகவும் இது இருக்கும் என கூறினார்.