News
கார்த்தியுடன் ஜோடி சேரும் சமந்தா !

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தையடுத்து விருமன் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் கார்த்தி. தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்க்கு பின்னர் பேச்சிலர் படத்ரை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று முடிந்து நடிகர் மற்றும் நடிகைள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க சில நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது சமந்தாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இன இரண்டு மொழிகளுலும் தயாராகவுள்ளதாம்.