Connect with us
 

News

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் சமந்தா !

Published

on

இயக்குநர் சிபி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வரவுள்ள திரைப்படம் டான். இப்படத்தை தவிர அயலான் படமும் திரைக்கு வரவிருக்கிறது.

தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படமும் தெலுங்கு படமென்றிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 22-வது படத்தை பற்றி அப்டேட் வெளியாகியுள்ளது.

மண்டேலா படத்தை இயக்கிய மடோனி அஸ்வின் சிவகார்த்திகேயனின் 22-வது படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தை ஜசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா இரண்டாவது முறையாக ஜோடி சேர இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.