Reviews

யசோதா – விமர்சனம் !

Published

on

Movie Details

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொடுக்கும் பெண்களை வைத்து நடந்த ஒரு மிகப்பெரிய மருத்துவ மாபெரும் குற்றமே இந்த திரைப்படம் அதை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் யசோதா.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சமந்தா தன் தங்கையின் மருத்துவ சிகிச்சைக்கக பணம் இல்லாமலும் வேறு வழி இல்லாமலும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொடுக்க முடிவு செய்கிறார். அதற்காக 20 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டு தங்கையை காப்பற்ற சொல்கிறார். 3 மாதங்கள் ஆனதும் சமந்தாவை அழைத்து செல்கிறது ஒரு கும்பல்.

அங்கு சென்றதும் சமந்தா போல பல ஆயிரக்கணக்கான பெண்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கிறார்கள். அப்படி அங்கு இருக்கும் 5 பெண்களுடன் நட்பு ஏற்படுகிறது சமந்தாவுக்கு அதில் இரண்டு பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது இறந்து போக அந்த இறப்பில் சந்தேகம் இருக்கிறது என்று நினைக்கும் சமந்தா அந்த இறப்புக்கான காரணத்தையும் அங்கு இருக்கும் மர்மத்தையும் கண்டு பிடிக்க முயற்சி செய்கிறார்.

அந்த தேடலில் அந்த மருத்துவமனையில் இருக்கும் மர்மத்தையும் அந்த இரு பெண்கள் இறந்து போனதுக்காக உண்மைக்காரணத்தையும் சமந்தா கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

யசோதா என்ற கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சமந்தா உண்மையை சொல்ல போனால் ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தங்கை மேல் அளவு கடந்த பாடம், அதிரடி சண்டை, என அனைத்து காட்சிகளிலும் அரங்கத்தை அதிர வைக்கிறார் சமந்தா. ஒரு மாஸ் ஹீரோ நடிக்க வேண்டிய கதையை மிகவும் தைரியமாக ஏற்று நடித்துள்ளார் சமந்தா.

படத்தின் வில்லியாக வரும் வரலட்சுமி சரத்குமார். அழகாக வந்து வில்லியாக நம்மை மிரட்டுகிறார். நிமிடத்துக்கு நிமிடம் மாறும் ஒரு பஞ்சோந்தி வில்லியாக துணிச்சலாக நடித்துள்ளார்.

இதை தவிர படத்தில் நடித்திருக்கும் உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், சம்பத் ராஜ், என அனைவருமே தங்களின் வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

முன்னரே கூறியது போல வாடகைத்தாய் அதில் நடக்கும் கிரைமை வைத்து படத்தை எடுத்துள்ள இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரிஷ். கதைக்கு என்ன வேண்டுமோ அதை சிறப்பாக செய்துள்ளார். தேவையற்ற காட்சிகள், காமெடி என அனைத்தையும் எங்கு வேண்டுமோ அதை கதையின் ஓட்டத்துடன் வைத்தது ரசிக்க வைக்கிறது.

மணிஷர்மாவின் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவாளர் சுகுமாரின் ஒளிப்பதிவு வியக்க வைக்கிறது.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரண்டு விதமான திரைக்கதையுடன் நகர்த்தி அதில் இரண்டிலும் எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையாமல் அந்த இரண்டு கதைகளையும் மிக சரியான இடத்தில் ஒன்று சேர்த்து வியக்க வைத்திருக்கிறார்கள்.
Yashoda Review By CineTimee

[wp-review id=”44553″]

Trending

Exit mobile version