Connect with us
 

News

தளபதி 67 படத்தில் விஜய்யுடன் மோதும் சஞ்சய் தத்?

Published

on

பீஸ்ட் படத்தின் வெற்றிக்கு பின்னர் தளபதி விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விஜய்க்கு 66-வது திரைப்படம். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா. சரத்குமார் அப்பாவாகவும் ஷ்யாம் சகோதரராகவும் நடிக்கவிருக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67-வது படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக ஹிந்தி நடிகர் சஞ்சய்தத்திடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறாம்.

சஞ்சய் தத் ஹிந்தியின் முன்னணி நடிகர்களில் ஒருவர் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தில் இவரின் வில்லத்தனம் மிரள வைத்தது. இவரின் கொடூரமான வில்லத்தனத்தை நாம் மறக்க முடியாது. தளபதி 67 படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகவுள்ளதாம்.