Connect with us
 

News

தெலுங்கில் ஹிட் ஆன படத்தின் ரீமேக்கில் சந்தானம் !

Published

on

தெலுங்கில் 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஏஜென்ட் சாய் ஶ்ரீனிவாச அத்ரேயா. இப்படத்தில் திரைக்கதை எழுத்தாளர் நவீன் பொலிஷெட்டி நாயகனாக அறிமுகமானார். இப்படத்தை ஸ்வரூப் என்ற இயக்குநர் இயக்கிவிருந்தார்.

சின்ன சின்ன மொக்கை கேஸ்களை விசாரித்து வரும் நாயகனுக்கு பெரிய கேஸ் ஒன்று கையில் மாட்டுகிறது. அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை காமெடி கலந்து சொல்லியிருந்தனர். தற்போது இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகின்றனர் சந்தானம் நாயகனாக நடித்திருவருகிறார் தமிழில் இப்படத்தை மனோஜ் என்பவர் இயக்கி வருகிறார்.

ஆர்ப்பாட்டமே இல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து தற்போது பாதி படத்துக்கு மேல் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாம். மிக விரைவில் இப்படத்தின் பெயரையும் மற்ற விபரங்களையும் படக்குழுவினர் வெளியிடயுள்ளனர்.