News

கிக் படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த சந்தானம் !

Published

on

கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகு வரும் திரைப்படம் கிக். இப்படத்தின் மூலம் கன்னட சினிமா உலகில் தன் பயணத்தை ஆரம்பிக்கிறார் சந்தானம்.

சந்தானத்திற்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை ராகினி திரிவேதி முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகும் இப்படத்தை சர்க்கல் பாக்ஸ் எண்டர்டெயிமெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மிக விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனது டப்பிங் பணிகளை சந்தானம் நிறைவு செய்தார்.

Trending

Exit mobile version