Reviews
80ஸ் பில்டப் – விமர்சனம் !
Cast: Santhanam, Radhika Preethi, K.S.Ravikumar, Anand Raj, Mansoor Ali Khan
Production: Studio Green
Director: S.Kalyan
Screenplay: S.Kalyan
Cinematography: JACOB RATHINARAJ
Editing: M.S.BHARATHI
Music: Ghibran
Language: Tamil
Runtime: 2 Hour 7 Mins
Release Date: 24 November 2023
குலேபகாவலி, ஜாக்பாட் படத்தின் இயக்குநர் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 80ஸ் பில்டப்.
80-ம் ஆண்டுகளில் நடக்கும் திரைக்கதை இப்படம். கமலின் தீவிர ரசிகனாக இருப்பவர் சந்தானம். ஜாமீன் குடும்பத்தை சேர்ந்த சந்தானத்தின் தாத்தா சுந்தர்ராஜன். இவர்களின் ஜாமீன் குடும்பத்தில் இருக்கும் பரம்பரை கத்தியை திருட திட்டம் போடுகிறார்கள் மன்சூர் அலிகான், மனோபாலா மற்றும் மொட்ட ராஜேந்திரன். திருடா வரும் இவர்களிடம் உள்ள வைர கற்களை கற்கண்டு என நினைத்து விழுங்கி விட்டு எதிர்பாராத விதமாக இறந்தும் போகிறார் சுந்தர்ராஜன். இருந்து போன சுந்தர்ராஜனின் உடலிருந்து வைரத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என நினைக்கிறது. அதே சமயம் சந்தானத்தின் தூரத்து உறவு பெண்ணாக வரும் ராதிகா ப்ரீத்தி மீது கண்டதும் காதலில் விழுகிறார் சந்தானம். தாத்தாவின் உடலை அடக்கம் செய்வதற்கும் தனது காதல் வலையில் நாயகியை விழ வைப்பதாகவும் தங்கையிடம் சபதம் காட்டுகிறார் சந்தானம். இறுதியில் அதில் வெற்றி பெற்றாரா இல்லையா? மன்சூர் அலிகான் கும்பல் அந்த வைர கற்களை எடுத்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
வழக்கமாக சந்தானம் படம் என்றாலே காமெடி அதிகமாக இருக்கும் ஆனால் இப்படத்தில் காமெடி எங்கு இருக்கிறது என்று கேட்க வைக்கிறது. பொங்கல் செய்யும் போது முந்திரி பருப்பு போல அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருக்கிறது. படத்தில் பல காமெடி காட்சிகளில் நம்மை சோதிக்கிறது. படத்தின் கதைக்குள் செல்லவே முதல் 20 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது.
சந்தானம் வழக்கமாக தனது நடிப்பை இப்படத்திலும் கொடுத்துள்ளார். என்ன இப்படத்தில் சந்தானத்தின் அந்த ஒன்லைன் காமெடி பெரிதாக எடுபடவில்லை. நாயகியாக வரும் ராதிகா ப்ரீத்தி, சுந்தர்ராஜன், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி தங்களின் பணியை சரியாக செய்துள்ளனர்.
இவர்களுடன் படத்தில் வரும் கே.எஸ்.ரவிக்குமார், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, படம் முழுவதும் வருகிறார்கள். ஆனாலும் இவருக்கு அழுத்தமான ஒரு காட்சி கூட இல்லை என்பது வருத்தம். அதே போல சந்தானத்தின் தங்கை வேடத்தில் வரும் மிகை நடிப்பு ரசிக்க வைக்கவில்லை.
படத்தின் ஒரு ஆடுதல் கூட்டணி என்றால் ஆடுகளம் நரேன் – ஆனந்தராஜ் பல இடங்களில் இவர்களின் காமெடி படத்தை காப்பாற்றி விடுகிறது. படம் முழுவதும் குடிகாரராக வரும் நரேன் பேசும் வசனங்கள், பெண் வேடத்தில் வரும் ஆனந்தராஜூடன் சேர்ந்து இவர் செய்யும் லூட்டி அதகளம். இவர்களின் கூட்டணியில் வரும் காமெடி என்றும் மறக்க முடியாது.
முழுக்க முழுக்க காமெடி படமாக இருந்தாலும் லாஜிக் என்று ஒன்றை பார்க்க கூடாது என்று கூறினாலும். நம் மூளையை கழட்டி வைத்து விட்டு பார்த்தாலும் படத்தில் உள்ள பல காட்சிகள் நம்மை சோதிக்கிறது. உதாரணத்துக்கு சொல்ல போனால் சாவு வீட்டில் சடலத்தை வைத்துக்கொண்டு செய்யும் காட்சிகள், பிணத்தை அலோக்காக தூக்கி கொண்டு ஓடுவது, சண்டை போடுவது, பிணம் காணாமல் போவது எல்லாம் சும்மா இஷ்டத்துக்கு வைத்துள்ளார் இயக்குநர்.
Rating: 3/5