Connect with us
 

News

சந்தானத்தின் டிக்கிலோன படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

சிறந்த காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம். என்ன நினைத்தாரோ தெரியவில்லை நானும் இனி நடிச்சா ஹீரோவாதான் படம் பண்ணுவேன் சொன்னவர் இன்று முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார்.

தற்போது சந்தானம் டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம் போன்ற படங்களை வெளியிட காத்திருக்கின்றார்.

இந்நிலையில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோன படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட போகிறார்கள். இப்படத்தை ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன் கே இயக்கியுள்ளார். இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஷெரின் மற்றும் அனைகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்திய அணியின் முன்னால் வீரர் ஹர்பஜன் சிங் இப்படத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போது இப்படம் பற்றிய ஒரு முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. டிக்கிலோனா படத்தை வரும் செப்டம்பர் மாதம் 10-ம் தேதி ZEE5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது என்று கூறப்படுகிறது.