News
சந்தானம் ஜோடியாக நடிக்கும் மேகா ஆகாஷ் !

நடிகர் சந்தானம் தற்போது நடித்து வரும் திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கவுள்ளார். இதற்கு முன்னதாக இவர்கள் கூட்டனியில் வெளியான டிக்கிலோனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்க நடிகை மேகா ஆகாஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.