News
நாடோடிகளின் பயணத்தை சொல்லும் கதையில் சந்தானம் !

மேயாத மான், ஆடை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் ரத்னகுமார். கிட்டத்தட்ட 2 வருட இடைவெளிக்கு பின்னர் ரத்னகுமார் இயக்கும் படத்தில் சந்தானம் நடித்து வருகிறார்.
நாடோடிகளின் பயணத்தை அடைப்படையாக கொண்டு உருவாகிவரும் இப்படத்திற்கு ‘குலு குலு’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் ராஜ் நாராயணன் தயாரிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை வெளியானது.
சந்தானத்தின் சினிமா பயணத்தில் இப்படம் சற்று வித்தியாசமாக மாறுபட்ட கதைக்களத்தை கொண்ட திரைப்படமாக இருக்கும் என்றே சொல்லலாம். வெளியான டைட்டில் மோஷன் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்து வரவேற்பு கிடைத்து வருகிறது.