News
சந்தானம் நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம் பர்ஸ்ட் லுக் வெளியானது !

கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் ஸ்வரூப் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஏஜண்ட் சாய் ஶ்ரீநிவாச ஆத்ரேயா. இப்படத்தில் நாயகனாக நவீன் பொலிசெட்டி நாயகியாக ஸ்ருதி சர்மா நடித்திருந்தனர்.
இந்தநிலையில் இந்த திரைப்படம் தமிழில் அதிகாரபூர்வமாக ரீமேக் செய்யபடுகிறது அதில் சந்தானம் நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது. இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது தமிழில் ஏஜெண்ட் கண்ணாயிரம் என்று பெயர் வைத்துள்ளனர்.
நடிகர் சந்தானம் மற்றும் ரியா சுமன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், அவர்களுடன் இணைந்து, ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், E ராமதாஸ், அருவி மதன், ஆதிரா, இந்துமதி, ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் குரு சோமசுந்தரம் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் மனோஜ் பீடா இயக்கியுள்ள ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் நடிகர் சந்தானத்தை முற்றிலும் வேறொரு கோணத்தில் காட்டும்.‘டிக்கிலோனா’ படத்தின் பெரு வெற்றிக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடிகர் சந்தானத்துடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். அஜய் எடிட்டர், ராஜேஷ் கலை இயக்குநர், ஸ்டன்னர் சாம் ஸ்டண்ட் மாஸ்டர், பிரசன்னா ஜே.கே நிர்வாக தயாரிப்பாளர் மற்றும் பல்லவி சிங் ஆடை வடிவமைப்பாளர், ஆகிய பணிகளை செய்துள்ளனர்.