News
சந்தானம் நடிக்கும் இங்க நான்தான் கிங்கு படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இங்க நான்தான் கிங்கு. பிரபல தயாரிப்பு நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரித்து உள்ளனர்.
இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை சந்தானம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் படி மே மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பதிவிட்டுள்ளார்.