News
சந்தானம் நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி வெளியிட்டு தேதி அறிவிப்பு !

டிக்கிலோனா படத்தின் வெற்றிக்கு பின்னர் சந்தானம் மீண்டும் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. பீப்பிள் மீடியா ஃபேக்டரி இப்படத்தை தயாரித்துள்ளது.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பிப்ரவரி 2-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது.