News

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள ராஜ வம்சம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியீடு !

Published

on

இயக்குநர் சுந்தர் சி உதவியாளர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, யோகி பாபு, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ராஜவம்சம்.

இப்படத்தை சுந்தர்.சி இயக்கும் பாணியிலேயே இயக்கியுள்ளார். காமெடி, பேமிலி செண்டிமென்ட் எந்த ஒரு தரமான பொழுதுபோக்கு படமாக உருவாக்கியுள்ளார் கதிர்வேலு. 49 நடிகர் மற்றும் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா தயாரித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரொனா இரண்டாம் அலை காரணமக தள்ளிவைப்பட்டது. தற்போது படிப்படியாக கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதால் இப்படத்தை வரும் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து அதை அதிகாரபூர்வமாகவும் அறிவித்துள்ளது.

சித்தார்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

Trending

Exit mobile version