News

சசிகுமாரின் 21வது படத்தின் டைட்டில்-பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

இயக்குநராக தமிழ் சினிமாவுக்கு வந்த சசிகுமார் பிஸியான நடிகராக மாறியுள்ளார்.இவரின் நடிப்பில் ஏற்கனவே இரண்டு திரைப்படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கும் நிலையில் தற்போது அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வரும் 23-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தை சத்ய சிவா என்ற இயக்குநர் இயக்கவுள்ளார். செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இது சசிகுமாரின் 21-வது திரைப்படமாகும். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹரிப்பிரியா நடிக்கவிருக்கிறார். விக்ராந்த இப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version