News
ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் சதுரங்க வேட்டை 2 பாகம் !

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது இதில் அரவிந்த சாமி மற்றும் திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தினை மனோபாலா தயாரித்துள்ளார். நிர்மல் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளரான மனோபாலாவிற்கும் நடிகர் அரவிந்த சாமிக்கும் இடையே சம்பள விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்பட்ட வந்த நிலையில் தற்போது வெளியீட்டுட்டிலும் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இப்படவிவகாரம் பேச்சு வார்த்தையில் மூலம் சுமூக நிலையை எட்டியுள்ளதாம். இதனால் இப்படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட போவதாகவும் கூறப்படுகிறது.