News

இசையமைப்பாளார் டி.இமான் இரண்டாவது திருமணம் !

Published

on

பிரபல இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில்தான் இவருக்கும் மனைவி மோனிகாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர்.

தற்போது டி.இமான் கலை இயக்குநராக இருந்த உபால்டு என்பவரின் மகள் எமிலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுனர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமணம் நேற்று நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த திருமணத்தில் நடிகை மற்றும் தயாரிப்பாளர் குட்டி பத்மினி, சங்கீதா மற்றும் அவரின் கணவர் கிரிஷ் உள்பட ஒரு சில திரை பிரபலங்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Trending

Exit mobile version