Connect with us
 

News

பீஸ்ட் படத்தில் மிரட்டும் அரசியல்வாதியாக செல்வராகவன் !

Published

on

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். விஜய்யுடன் இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்து விட்டது. இன்னும் சில பாடல்கள் படத்தின் இறுதி சண்டைக்காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.

இந்தநிலையில் படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தும் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஷாப்பிங் மாலில் படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கியமான வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.

தற்போது செல்வராகவன் படத்தில் என்ன மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தில் செல்வராகவன் மிகவும் கொடூரமான ஒரு அரசியல்வாதியாக நடித்துள்ளாராம்.