மைனா, கும்கி, கயல் படங்களில் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் பிரபு சாலமன். இவரின் அடுத்த படைப்பான செம்பி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா, சிறுமி நிலா, நாஞ்சில் சம்பத், ஞானசம்பந்தம் ஆகியோரின் நடிப்பில் இந்த செம்பி திரைப்படம் உருவாகியுள்ளது. வழக்கத்துக்கு மாறாக டி.இமான் கலட்டி விட்டு இப்படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னாவை இசையமைப்பாளராக போட்டுள்ளார் பிரபு சாலமன்.
கொடைக்கானல் அருகில் உள்ள ஒரு மலைக்கிராமம் அங்கு தன் பேத்தி செம்பியுடன் வாழ்ந்து வருகிறார் கோவை சரளா. ஆதரவற்ற இவர்கள் அந்த பகுதியில் கிடைக்கும் வேலைகளை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அங்குள்ள எதிர்க்கட்சி தலைவரின் மகன் அவரின் நண்பர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார் சிறுமி செம்பி.
குற்றவாளிகளை அடியாளம் தெரியாயமல் தவிக்கும் கோவை வரளா பின்னர் தன் பேத்திக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று காவல்துறையை நாடுகிறார். ஆனால் அங்கு போகும் கோவை சரளா வேறு ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து தப்பிக்க முயலும் கோவை சரளா மீண்டு வந்து தன் பேத்திக்கு நடந்த கொடுமைக்கு நீதி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
திரைப்படத்தின் முதல் பாதியை தன் அனுபவ நடிப்பால் தன் தோல்களில் தாங்கி பிடித்து செல்கிறார் கோவை சரளா. சரளாவின் பேத்தியாக வரும் நிலா சிறு வயதில் இப்படி ஒரு அனுபவ நடிப்பா என வியக்க வைக்கும் விதமாக உள்ளது அருமை. பாலியல் வன்புணர்வுக்குள்ளான பின் வரும் காட்சிகள் நமக்கு அந்த வலியை கொடுக்கிறது.
படத்தின் ஓட்டத்திற்கு ஏற்ற போலவே நகைச்சுவை காட்சிகளை அமைத்திருந்தது கண்டிப்பாக பிரபு சாலமன் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும் காரணம் மிகவும் சீரியஸான கதையில் ஒரு இடத்தில் சறுக்கினாலும் படம் சொதப்பி விடும் அப்படி பட்ட இடத்தில் நகைச்சுவையை கையாண்ட விதம் சிறப்பு.
அரசியல்வாதியாக வரும் பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் ஆகியோர் மிகவும் சரியான தேர்வு என்றே சொல்லலாம். அஸ்வின் குமார் வழக்கறிஞராக இரண்டாம் பாதியில் வருகிறார். முதல் பாதியை கோவை சரளாவுக்கு எழுது கொடுத்து விடலாம் இரண்டாம் பாதியை அஸ்வின் குமாருக்கு.
தன் நடிப்பை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வரும் அஸ்வின் குமாருக்கு இப்படம் மிகப்பெரிய வாய்ப்பு அதை சரியாக பயன்படித்தியும் உள்ளார். பேனர் விழுந்து இளம் பெண் இறக்கும் சம்பவம் முதல் நீட் தேர்வு வரை கிடைக்கும் இடமெல்லாம் அரசியல் வசனங்கள் புகுந்து விளையாடுகிறது. சமூகத்தின் மீது ஏன் அக்கறை வேண்டும் இந்த வதந்தி செய்திகள் எப்படி உருவாகிறது என்பது எல்லாம் படத்தின் ஆணிவேர்.
காவல் துறையின் மேல் இருக்கும் குறைகளை எல்லாம் என்ஹ அளவுக்கு சுட்டிக்காட்ட முடியுமோ அந்த அளவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார் பிரபு சாலமன் குறிப்பாக படத்தின் முதல் பாதியில் காவல்துறை அதிகாரியாக வரும் ஒருவர் கோவை சரளாவிடம் பேசும் வசனம் எல்லா சமானிய பொதுமக்களை நோக்கி வைக்கப்படுபவை அவை எல்லாம் யதார்த்தம்.
என்னதான் இவ்வளவு கனமான கதை இருந்தாலும் கதைக்கு இன்னும் வேகமான திரைக்கதை அமைக்க தவறி விட்டார் பிரபு சாலமன். இரண்டாம் பாதி முழுவதுமே பேருந்திலேயே நகர்கிறது. அதில் வரும் எந்த ஒரு நடப்பும் நம் இயழ்பு வாழ்க்கையில் நடக்காத ஒன்று.
செம்பிக்கு உதவ நீதிமன்றத்தில் முறையிடுவது ஆதாரங்களை திரட்ட சைபர் கிரைம் வசதி வரை பேருக்குள்ளேயே ஏற்பாடு செய்யும் காட்சிகள் எல்லாம் நம்பக தன்மை இல்லை. அத்துடன் போக்சோ சட்டம் பற்றி பேச பல கோணங்களில் முயற்சி மட்டும்தான் செய்துள்ளனர் இன்னும் அழுத்தமாகவும் தெளிவாகவும் பேசியிருக்கலாம்.
பின்னணி இசை ரசிக்கும்படியாக உள்ளது. முதல் பாதியில் வரும் இயற்கை சார்ந்த காட்சிகளுக்கு பின்னணி இசை மிகவும் பக்கபலமாக உள்ளது.
சில பல லாஜிக் குறைகள் இருந்தாலும் அவை எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் செம்பி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். என்ன இருந்தாலும் அன்பை பேச முயற்சி செய்திருக்கும் செம்பிக்கும் நம் அன்மை முழுமையாக செலுத்துவோம்.
Sembi Review By CineTime
[wp-review id=”44946″]