Connect with us
 

News

அண்ணன் படத்தை பார்த்து விட்டு பாராட்டிய நடிகை ஷாலினி அஜித் குமார் !

Published

on

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் நடிப்பில் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ருத்ர தாண்டவம். கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்றாலும். எதிர் பார்த்ததை விட படம் நல்ல வெற்றி பெறும் என்றே சொல்லப்படுகிறது. வசூல் ரீதியாகவும் இண்ரைய முதல் நாளில் நல்ல வசூல் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்ட் நடிகை ஷாலினி அஜித் அவர்களின் அண்ணன் ஆவார். இந்த படத்தை திரையரங்கிள் சென்று பார்த்து விட்டு படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

ஷாலினி வாழ்த்து கூறியதற்கு சில ரசிகர்கள் இரண்டு விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். சாதி, மதம் பற்றிய படங்களுக்கு ஏன் நடிகை ஷாலினி அஜித் இது போன்று ஆதரவு கொடுக்கிறார் என்று ஒரு தரப்பும்.

சாதி, மதத்தை ஷாலினி அஜித் பார்க்கவில்லை என் அண்ணன் நல்ல தரமான படத்தில் நடித்துள்ளார் அவருக்கு ஆதரவு கொடுக்கிறார் இதில் என்ன தவறு இருக்கிறது என்று ஒரு தரப்பும் பதிவுகளை பதிவு செய்து வருகிறார்கள்.

இது போன்ற ரசிகர்களுக்கு சொல்வது ஒன்றுதான் சினிமா ஒரு பொழுது போக்காக மட்டுமே பாருங்கள் அதற்காக மட்டுமே சினிமா எடுக்கப்படுகிறது என்பது ரசிகர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.