News

வேள் பாரி படத்தை மூன்று பாகங்களாக எடுக்கும் ஷங்கர் !

Published

on

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த நிலையில் அடுத்து வேள் பாரி மன்னன் சரித்திர கதையை படமாக எடுக்க போவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து ஷங்கர் அளித்துள்ள பேட்டியில் “ வேள் பாரி சரித்திர நாவலை கொரோனா சமயத்தில் படித்தேன். என்னை மிகவும் ஈர்த்தது உடனடியாக திரைக்கதையாக உருவாக்கினேன். அதை 3 பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளேன். இதில் நடிக்கும் நடிக்கும் நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை.

ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று அவர்களின் பார்வையிலிருந்தே படம் எடுக்கிறேன். ஆஸ்கார் விருதை நான் எதிர்பார்க்கவில்லை. இந்தியன் 2 படப்பிடிப்பை நடத்தியபோது இரண்டு பாகங்களுக்கான கதை அதற்குள் இருந்தது. அவற்றை வெட்டி எறிய மனமில்லாமல் இந்தியன் 3-ம் பாகத்தை உருவாக்கினோம். இந்தியன் 4 எடுக்கும் திட்டம் இல்லை.

இப்படத்திற்காக கமல்ஹாசன் 70 நாட்கள் மேக்கப் போட்டு நடித்தார். என் முந்தைய படங்களான முதல்வன், அந்நியன் உள்ளிட்ட படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகள் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் தொடர்ச்சியாகவே முடிந்து இருக்கும். ஆனாலும் அவற்றின் அடுத்த பாகங்களை எடுப்பது குறித்து நான் யோசித்தது இல்லை.

 

Trending

Exit mobile version