Connect with us
 

News

சத்தமில்லாமல் வளர்ந்து வரும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சாந்தனு படப்பிடிப்பு !

Published

on

கலகலப்பான திரைப்படம் எடுக்கும் இயக்குநர் எம்.ராஜேஷ் இவரின் இயக்கத்தில் ஜெயம் ரவி ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இந்த படம் தொடங்குவதற்கு முன்னதாக நடிகர் சாந்தனுவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார் எம்.ராஜேஷ் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகைகளாக ஹன்சிகா மற்றும் நடிகை ஜனனி நடிக்கிறார்கள்.

இந்த தகவலை அப்படத்தில் நடிக்கும் எம்.ராஜேஷ் அவர்களின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான லக்கி நாராயணன் தெரிவித்துள்ளார். ஓகே.ஓகே படத்தில் ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ள வரும் வெளிநாட்டு மாப்பில்லையாக நடித்திருந்தவர்தான் இந்த லக்கின் நாராயணன்.

இப்படத்தில் ஹன்சிகாவுடன் அதிக காட்சிகளில்தன் நடித்திருப்பதாகவும் அதே சமயம் படத்தில் நெகடிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார் லக்கி நாராயணன்.