News

விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக ஷான்வி ஶ்ரீவட்சா?

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஜக்கிய அரபு அமீகரத்தில், டிரைலர் வெளியீட்டை பிரான்சில் மே 18-ம் தேதி நடக்கும் கென்ஸ் சர்வதேத திரைப்பட விழாவிலும் வெளியிட உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல கன்னட நாயகி ஷான்வி ஶ்ரீவட்சவா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிளாஷ்பேக்கில் வரும் 10 நிமிட காட்சிகளில் மிக அழுத்தமான ரோலில் நடித்துள்ளார் என்றும் இந்த பிளாஷ் பேக் காட்சியில் விஜய் சேதுபதியின் கேரக்டரும் இடம் பெறுகிறது என்கிறார்கள்.

இந்த படத்தில் ரூ.10 கோடி செலவு செய்து பிளாஷ்பேக் காட்சியில் கமல்ஹாசன் டி.ஏஜிங் வி எப் எக்ஸ் டெக்னாலஜி மூலம் 1980-களில் இருந்ததை போல இளைமை தோற்றத்தில் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் இளைமையான கமலுக்கு ஜோடியாகத்தான் ஷான்வி நடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version