Connect with us
 

News

தளபதி விஜய்க்கு சகோதரராக நடிக்கும் ஷாம் !

Published

on

பீஸ்ட் படத்திற்கு பின்னர் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் அடுத்து நடித்து வருகிறார் தளபதி விஜய். இப்படம் விஜய்க்கு 66-வது திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னா நடித்து வருகிறார். சரத்குமார் விஜய்க்கு அப்பாவாக நடித்தி வருகிறார். இதில் விஜய்க்கு அண்ணாவாக 1980-களில் நடித்த மோகன் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியானது ஆனால் இதனை மோகன் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ஷ்யாம் விஜய்யின் சகோதரராக நடிக்கவுள்ளார். அடுத்த மாதம் 2-ம் தேதி ஜதராபாத்தில் நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் ஷ்யாம் இணையவுள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த 2000-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி படத்தில் விஜய்யின் நண்பராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.