News

அயலான் ஏலியனுக்கு குரல் கொடுத்த சித்தார்த் !

Published

on

இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அயலான். கே.ஜே.ஆர்.நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிக அளவிலான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதாம்.சுமாராக 4500-க்கும் மேற்பட்ட வி.ஃப்.எக்ஸ் காட்சிகளும் கொண்ட முழு நீள லைவ் ஆக்ஷன் திரைப்படம்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே போல இப்படத்தில் வரும் ஏலியன் கதாப்பாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் உள்ளதாம். இந்த எலியன் கதாப்பாத்திரத்துக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் பேசியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

Trending

Exit mobile version