News

தந்தை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சிம்பு !

Published

on

இயக்குநர் மற்றும் நடிகர் டி.ராஜேந்தர் அவர்களுக்கு கடந்த மாதம் 19-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பின்னர் பரிசோசித்த மருத்துவர்கள் கூறியதாவது இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதாகவும் அறிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று டி.ராஜேந்திரை சந்தித்து நலம் விசாரித்தார். அதே சமயம் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவுள்ளனர் குடும்பத்தினர். இதற்காக சென்னையிலிருந்து நாளை மறுநாள் அமெரிக்கா செல்லவுள்ளாராம் டி.ராஜேந்தர்.

இதற்கான மருத்துவ ஏற்பாடுகளை செய்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் Silambarasan அமெரிக்கா சென்றுள்ளாராம்.

Trending

Exit mobile version