News

திருநங்கையாக நடிக்கும் சிலம்பரசன் !

Published

on

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சுமார் 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் ஒரு வரலாற்று பின்னணி கொண்ட கதைக்களத்தில் உருவாகவுள்ளது.

அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது அதில் சிலம்பரசன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று தெரியவந்தது. அதில் ஒரு சிம்பு திருநங்கை வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.

இது பற்றி சிம்பு தரப்பில் விசாரித்த போது சிம்பு திருநங்கை வேடத்தில் நடிக்கவில்லை என்றும் பெண் நளினத் தன்மை கொண்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள்.

 

Trending

Exit mobile version