News

முதல் நாளே டாக்டர் பட வசூலை முந்தியது சிலம்பரசனின் மாநாடு !

Published

on

சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் டாக்டர். இப்படம் 100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்தது.

டாக்டர் படத்தின் முதல் நாள் வசூலை விட நேற்று வெளியான மாநாடு திரைப்படத்தின் வசூல் அதிகம் என்றும் அந்த முதல் நாள் வசூலை மாநாடு முறியடித்துவிட்டதாகவும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பல்வேறு பிரச்சனைகளிலிருந்து மீண்டு பல போராட்டங்களுக்கு பின்னர்தான் நேற்று மாநாடு திரைப்படம் வெளியானது. ஆனாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு வரவேற்பு இருந்தது. காரணம் வெங்கட் பிரபுவின் இயக்கமும் சிம்புவின் வித்தியாசமான திரைப்படமும் என்பதால்.

இந்த நிலையில் டாக்டர் திரைப்படன் முதல்நாள் வசூலை விட 3 முதல் 5 லட்சங்கள் அதிகமாக மாநாடு வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியான வசூல் நிலவரம் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த வருடம் வெளியாக திரைப்படங்களில் மாஸ்டர், கர்ணன், அண்ணாத்த, டாக்டர், மாநாடு திரைப்படங்கள் முதல் அதிக நாளில் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version