News

மாநாடு படப்பிடிப்பு நிறைவு ஆயுத பூஜை தினத்தில் வெளியாகிறதா?

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வந்த திரைப்படம் மாநாடு கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முழுமையாக முடிவடைந்தது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.

இப்படத்தின் அனைத்து பாடப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைபோகிறதாம். மாநாடு படத்தை வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம் என்று தகவல் வெளியாகியுள்ளாது.

மாநாடு படத்தில் சிப்புக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா. உள்ளிட்ட படம் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாநாடு படம் முடிவடைந்த நிலையில் சிலம்பரசன் அடுத்ததாக இயக்குநர் கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version