News

எரியும் நெருப்பு மிரட்டும் சிம்பு 48வது படத்தின் தோற்றம் வெளியானது !

Published

on

சிம்பு பிறந்தநாளையொட்டி STR48 படத்தின் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியாமி இயக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் மே மாதம் அறிவித்தது படக்குழு. அதன் பின்னர் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாத நிலையில் இப்படம் கைவிடப்பட்டதாக சில வதந்திகள் பரவி வந்த நிலையில் இப்படத்தில் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிறந்த நாளை முன்னிட்டு கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

பீரியட் டிராமா கே=கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் இன்று வெளியான போஸ்டர் அதை உறுதியும் செய்துள்ளது. நீளமான தாடி, முடியுடன் கூடிய சிம்புவின் தோற்றமும் அவரது உடையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த போஸ்டரில் இரண்டு சிம்புவின் தோற்றங்கள் உள்ளது இதன் மூலம் இப்படத்தில் சிம்பு இரண்டு கதாப்பாத்திரங்களில் நடிக்கிறாரா என்ற ஒரு கேள்வி நமக்கு எழுந்துள்ளது.

 

Trending

Exit mobile version