Connect with us
 

News

சிம்பு 49 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம் !

Published

on

நடிகர் சிலம்பரசன் 49-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. சிலம்பரசன் 42-வது பிறந்தநாளை முன்னிட்டு சிம்பு 49-வது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இப்படத்திற்கு தற்போது STR49 என்று குறிப்பிட்டுள்ளனர் படக்குழு. இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் திப்பு அவர்களின் மகன் பிரபல பாடகருமான சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. மிக நீண்ட வருடங்களுக்கு பின்னர் சிம்பு இப்படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளார். அத்துடன் மிக நீண்ட வருடத்துக்கு பின்னர் நடிகர் சந்தானம் இப்படத்தில் காமெடியனாக நடிக்கவுள்ளார்.

 

Continue Reading