Connect with us
 

News

சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு நடிப்பது உண்மையா?

Published

on

பிரபல பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் Simbu ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் வெளியான துரோகி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதனை தொடர்ந்து இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை இயக்கினார். தற்போது சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.

இந்த நிலையில் சூரரைப்போற்று ஹிந்து ரீமேக் திரைப்படத்தை முடித்தவுடன் நடிகர் சும்புவை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக கோலிவுட்டில் ஒரு கதை பரவி வந்தது.

இது பற்றி சுதா கொங்கரா தரப்பில் விசாரித்த போது ‘சூர்யாவுடந்தான் எனது அடுத்த படம் அது முடிவு செய்து விட்டேன். அதற்கு அடுத்த படியாக ஜே.ஜி.எப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கவுள்ளேன் என்று கூறினார்.