News

மூன்றாவது முறையாக இணையும் சிம்பு – ஹன்சிகா ஜோடி !

Published

on

ஒரு மிக நீண்ட போராடத்திற்கு பின்னர் மாநாடு என்ற படத்தின் மூலம் இழந்த அனைத்து மார்க்கெட்டையும் திரும்ப பிடித்து விட்டார் சிம்பு என்றே சொல்ல வேண்டும்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு.

இப்படங்களை தொடர்ந்து நந்தா பெரியசாமி இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சிம்பு நடிக்கும் இப்படத்தில் நடிகை ஹன்சிகா ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.

இந்த ஜோடி இதற்கு முன்னர் வாலு மற்றும் மஹா ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். வாலு திரைப்படம் நடித்த போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்து சிறு நாட்களிலேயே அது மறைந்தும் போனது.

காதல் ஜோடிகளாக பிரிந்தாலும் நல்ல நட்பு இருவர்களிடையே தொடர்கிறது. தற்போது இந்த நிலையில்தான் இருவரும் மூன்றாவது முறையாக இப்படத்தில் ஹன்சிகா – சிம்பு ஜோடி இணையப்போகிறது.

Trending

Exit mobile version