News

இரண்டு நாளில் ரூ.14 கோடி வசூல் செய்த மாநாடு !

Published

on

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருனாகரன், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த திரைப்படம் 14 கோடி ரூபாய் வரை வசூல்செய்துள்ளது என இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டர் பக்கத்தில் தெரிவிதுள்ளார். இந்த வசூல் இன்னும் அதிகமாக வந்திருக்கும் தொடர் மழை காரணமாக சற்று வசூல் குறைந்துள்ளது என்பது கோலிவுட் வட்டாரம்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பின்னர் சிம்புவுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. மாநாடு படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமைகளை வாங்க பலர் போட்டி போட்டு வருகிறார்கள்.

Trending

Exit mobile version