News
வெந்து தணிந்தது காடு ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு !

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் செப்டம்பர் 15-ம்தேதி வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை ஜசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்தார்.
சிம்புக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருந்தார். திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓடிடி தள வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. தீபாவளி திருநாள் அன்று இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் இதற்காக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.