சென்னையிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார் அருண் விஜய். கடமை தவறாத அதிகாரியாகவும் கொஞ்சம் கோபம் கொண்ட அதிகாரியாகவும் இருக்கிறார்.
இவர் காதலித்து பெண் வீட்டோர்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொள்கிறார். 5 வருடங்களுக்கு பின்னர் அருண் விஜய்யும் மணைவியையும் வீட்டிற்கு வருமாறு நாயகியின் அம்மா சொல்கிறார். வேலை காரணமாக அருண் விஜய் போகாமல் மனைவி பாலக் லால்வானியும் குழந்தையும் போக சொல்கிறார். அப்படி சென்று விட்டு வரும் வழியில் மனைவி பாலக் லால்வானி கொலை செய்யப்படுகிறார். அவரின் உடலிற்கு அருகில் ஒரு ஆண் உடலும் இருக்கிறது. இதனால் இது கள்ளக்காதல் வழக்கு என வழக்கு பதிவு செய்கிறார் மற்றுமொரு இன்ஸ்பெக்டர். இதனால் கடும் Sinam கொண்ட அருண் விஜய் அந்த இன்ஸ்பெக்டர் கையை உடைத்து விட வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார் அதுண் விஜய்.
பின்னர் சில வாரங்கள் போக அருண் விஜய்யை அழைத்து மீண்டும் பணியில் சேர சொல்லி மனைவியின் கொலை வழக்கை விசாரித்து சரியான கொலைகாரணை கண்டு பிடிக்குமாறு அருண் விஜய்க்கு உயர் அதிகாரி உத்தரவிடுகிரார். அதன் பின்னர் தன் மனைவியை கொலை செய்த கொலைகாரர்களை கண்டு பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
அருண் விஜய் போலீஸ் அதிகாதி வேடத்திற்கு மிகவும் அழகாக பொருந்தக்கூடிய நடிகர். இப்படத்தில் அதே போலவே மிக அழகாக பொருந்தியுள்ளார். மனைவி இறந்த சோகம், மனைவி மீது விழுந்த அவதூறான பலியை துடைக்க வேண்டும் என கோபத்துடன் விசாரணை, அன்பான அப்பாவக, கணவனாக என ரசிக்கும் படியான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.
அருண் விஜய்யின் மனைவியாக வரும் நடிகை பாலக் லால்வானி ஆரம்பத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் வந்து செல்கிறார். ஏட்டையாவாக வரும் காளி வெங்கட் தன் நடிப்பால் மனதில் பதிகிறார். படத்தில் வில்லன் யார் என்பதை விட கொலைகாரர்கள் யார் என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ் அது நமக்கு தெரிந்ததும் படம் முடிவுக்கும் வருகிறது. அந்த சிறு சன்பென்ஸ்தான் படத்தின் பலம் என்றே சொல்லலாம்.
கோபிநாத்தின் ஒளிப்பதிவு இரவு நேரக் காட்சிகளை மிக அழகாவும் சிறப்பாகவும் படம் பிடித்து காட்டியுள்ளார். ஷபீர் இசை மற்றும் பின்னணி இசை சுமார் ரகம்.
வழக்கமாக தமிழ் சினிமாவில் ஒரு போலீஸ் படம் என்றால் அடிதடி மாஸ் வசனம் என இருக்கும் ஆனால் அந்த பாதையிலிருந்து விலகி ஒரு முழு நீள சென்டிமென்ட்டான படமாக கொடுத்துள்ளார் இயக்குநர்.
Sinam Review By CineTime
[wp-review id=”44002″]