News

விஜய்யுடன் ஒரு படத்தில் பணி புரிய பேச்சு வார்த்தை நடத்தும் சிறுத்தை சிவா !

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான அண்ணாத்த திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் வசூலில் சாதனை படைத்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கிவிருந்தார்.

அண்ணாத்த முதல் நாளில் மட்டும் 35 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் படு மோஷமாக இருப்பதால் இது போன்ற வசூல் சாதனை என்று கூறி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் இயக்குநர் சிறுத்தை சிவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறியுள்ளார். அதே போல சூர்யாவுக்காகவும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கிய பல படங்கள் விமர்சகர்களில் மத்தியில் மோசமான விமர்சனத்தை மட்டுமே பெற்று வருகிறது. இருந்தாலும் சிறுத்தை சிவா முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கிக்கொண்டுதான் இருக்கிறார். விஜய்யுடன் இணையும் அந்த படமாவது இவருக்கு உண்மையான ஒரு வெற்றி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் போல சிறுத்தை சிவா.

Trending

Exit mobile version