News

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது சிவகார்த்திகேயன் வழக்கு !

Published

on

4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை கொடுக்கும் வரை மற்ற படங்களில் முதலீடு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்க கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவில், `மிஸ்டர் லோக்கல்’ படத்திற்கு பேசப்பட்ட பதினைந்து கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள பாக்கியை செலுத்தும்வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்யத் தடை விதிக்க வேண்டும் எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை வரும் 31-ம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதி எம்.சுந்தர் அறிவித்துள்ளார்.

Trending

Exit mobile version