News
ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர் !

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் டாக்டர். ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
டாக்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆன நிலையிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த படம் வெளியாக முடியாத நிலையில் உள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து அடுத்த மாதம் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ‘டாக்டர்’ படத்தை நேரடியாக திரையரங்கில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது