News

இம்மாதம் ஆரம்பமாகும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் !

Published

on

டாக்டர், அயலான் படங்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டான். இப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கி வருகிறார். லைகா நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார்.

இப்படதில் ப்ரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடந்து முடிந்தது.

பின்னர் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக தொடர்ந்து நடத்த முடியவில்லை தற்போது ஜூலை 15-ம் தேதி இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஒளிப்பதுவு கே.எம்.பாஸ்கரன் செய்ய ராக் ஸ்டார் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

Trending

Exit mobile version