News
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் இங்கிலாந்து நடிகை ஒலிவியா மோரிஸ் !

முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளும் இப்படம் உருவாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியது.
இந்த நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இங்கிலாந்து நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அனுதீப் இயக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை பாண்டிச்சேரியிலும் இங்கிலாந்திலும் படமாக்கபடவிருக்கிறதாம்.
இந்த நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ‘ஒலிவியா மோரிஸ்’ என்ற இங்கிலாந்து நடிகை நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்துள்ளார்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிக விரைவில் பாண்டிச்சேரிதில் ஆரம்பிக்கவுள்ளதா.