Connect with us
 

News

பீஸ்ட் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் !

Published

on

இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் திரைப்படம் பீஸ்ட் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.

பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதி அப்பாடலை பாடவும் உள்ளாராம். அனிருத் சிவகார்த்திகேயன் கூட்டணியில் பல பாடல்கள் ஹிட் பாடல்களாக வந்துள்ளது. அந்த வரிசையில் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் பாடலும் ஹிட் ஆகும் என்று தெரிகிறது.

சிவகார்த்திகேயன் எழுதி பாடவுள்ள பாடலை முதலில் தனுஷ் அவர்கள்தான் செய்யவிருந்தார் ஆனால் தனுஷ் தற்போது படப்பிடிப்புகளில் பிஸியாக உள்ளதால் இந்த வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளதாம்.