News
பார்க்கிங் பட இயக்குநர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் !

ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்ற படம் பார்க்கிங். இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இப்படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனந்துடன் இணைந்து மீண்டும் ஒரு படம் பணியாற்றுவேன் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் ஒரு கதை சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளதாகவும் மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவு அதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தற்போது அமரன் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படங்களை முடித்து விட்டு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.