News
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ரஜினி படத்தின் பெயர்?
![](https://cinetimee.com/wp-content/uploads/2022/05/News-2022-copy-60.jpg)
ரஜினிகாந்த் நடித்த பழைய படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு வைக்க திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் அஜித் படத்துக்கு ரஜினி படத்தின் பெயரான பில்லா பெயரை வைத்தனர்.இந்த படம் 2 பாகங்களாக வெளிவந்தது.
சிவா நடித்த படத்துக்கு தில்லுமுல்லு பெயர் வைத்தனர். இதை போல ரஜினியின் பொல்லாதவன், படிக்காதவன், தங்க மகன் பெயர்களின் தனுஷ் படங்கள் வந்தன. ரஜினியின் மாப்பிள்ளை ரீமேக் படத்திலும் தனுஷ் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு ரஜினி நடித்து 1986-ல் வெளியான ‘மாவீரன்’ பட பெயரை வைக்க பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாகவும் எனவே ராணுவ வீரன் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியக மலையாள நடிகை சாய் பல்லவி நடிக்கிறார்.