News
கொரோனா காரணமாக ஓ.டி.டி.க்கு செல்லும் சிவகார்த்திகேயன் படம் !

நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளாராகவும் வலம் வரும் நடிகர்கள் பலர் அதில் சிவகார்த்திகேயனும் ஒருவர். தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் இது வரைக்கும் இரண்டு படங்கள் தயாரித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா இப்படத்தை அருண் ராஜா காமராஜ் இயக்கிவிருந்தார். இதனையடுத்து ரியோ நடித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தயாரித்தார்.
அருவி படத்தின் அருண்பிரபு இயக்கயுள்ள திரைப்படம் வாழ் இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார் இது இவருக்கு மூன்றாவது திரைப்படம். இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு முடிவடைந்து யூ/ஏ சான்றிதலும் பெற்று வெளியீட்டு தயாராக இருந்தது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வெளியீடு தள்ளிப்போனது.
இந்நிழையில் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். வாழ் திரைபப்டத்தின் ஓடிடி உரிமத்தை சோனி லவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன் படத்தையும் ஓடிடி உரிமத்தை சோனி லவ் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.