News
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் !
நாநாடு மன்மதலீலை படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கட்பிரபு தற்போது தெலுங்கு இளம் ஹீரோ நாகசைதன்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. இது குறித்த பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படம் இம்மாதம் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இதை தவிர ‘அயலான்’ திரைப்படமும் வெளியீட்டு தயார் நிலையில் உள்ளது. இதை தவிர தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.